கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
நாட்டின் முன்னணித் தோட்ட நிறுவனங்களில் ஒன்றான எஸ்.டி கத்ரி நிறுவனம் தோட்டத் தொழில்துறையில் 800 கைதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலம் உட்பட பிற மாநிலங்களில் கைதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க அந்தத் தோட்ட நிறுவனம் முன் வந்திருப்பதாக மலேசிய சிறைச்சாலை இலாகாவின் சேவைப் பிரிவின் துணை ஆணையர் அஹ்மாட் ஃபௌட்ஸி அவாங் தெரிவித்தார்.
கைதிகள் திருந்திய நிலையில் மீண்டும் சமூகத்திற்குத் தங்களின் பங்களிப்பை வழங்கும் வகையில் அவர்களுக்குத் தோட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதற்கு கத்ரி நிறுவனத்துடன் ஒரு வியூகத் திட்டத்தைச் சிறைச்சாலை இலாகா கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








