ஹோர்ன் அடித்தார் என்பதற்காக கிள்ளானில் ஓர் உணவு விநியோகிப்பு பணியாளரை மடக்கி, சரமாரியாக அடித்து காயப்படுத்திய ஓர் ஆடவரின் அடாவடித்தன செயல் தொடர்பான காணொளி, இரண்டு தினங்களுக்கு சமூக வலைத்தளத்தில பரவலாக பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஆடவர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
முகமது பைசல் நஸ்ரி என்ற 39 வயதுடைய பட்டறை பணியாளரான அந்த நபர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 மாத சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.
சாலையில் அராஜகம் புரியும் வாகனமோட்டிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் சிதி ஜுபைதா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அந்நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் லங்காட் ட்டின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் 21 வயது உணவு விநியோகிப்பாளரை அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








