Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூருக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான, வாகன நுழைவு அனுமதி திட்டம் தொடங்கியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூருக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான, வாகன நுழைவு அனுமதி திட்டம் தொடங்கியது

ஜொகூர் , அக்டோபர் 01-

சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் மாநிலத்துக்குச் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான வாகன நுழைவு அனுமதி திட்டமான V.E.P. இன்று அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது.

இந்த புதிய V.E.P. திட்டத்தின் வழி சிங்கப்பூர் வாகனங்களில் வாகன நுழைவு அனுமதி வில்லையான Touch 'n Go மின்பணப்பையுடன் இணைக்கப்பட்டுள்ள V.E.P. அலைவரிசை அடையாள வில்லை ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாட்டினால் சிங்கப்பூலிருந்து ஜோகூரை நோக்கி வருகின்ற வாகனங்களின் எண்ணிக்கையில் இன்று 20 விழுக்காடு குறைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

V.I.P. வில்லை என்பது மலேசியாவிற்கு செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு அடையாள அட்டையைப் போல செயல்படுகிறது. இதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →