Oct 17, 2026
Thisaigal NewsYouTube

தீபாவளி உபசரிப்பு, பத்தாயிரம் பேர் கலந்து கொள்வர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபாவளி உபசரிப்பு, பத்தாயிரம் பேர் கலந்து கொள்வர்

கிள்ளான்,அக்டோபர் 08-

இம்மாதம் 26 ஆம் தேதி கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் நடைபெறவிருக்கும் சிலாங்வர் மாநில நிலையிலான தீபாவளி உபசரிப்பு நிகழ்வில் சுமார் 10,000 பேர் கலந்து சிறப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை 6.00 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்வில் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரிடின் ஷாரி சிறப்பு பிரமுகராக கலந்து கொள்வார் என்று மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.

இந்நிகழ்வில் 5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம். வார இறுதி விடுமுறை என்பதால் அதிகமானோர் இந்நிகழ்வில் பக்கேற்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மாலை 6.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என பாப்பாராய்டு சிலாங்கூர் கினியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →