ஈப்போ, டிசம்பர்.11-
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ஈப்போ, ஜாலான் சிலிபினில் வீற்றிருக்கும் அன்னை லூர்து மாதா தேவாலயத்தில் 53 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது.
ஐந்து நிலை அடுக்குகளைக் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம், ஈப்போவில் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரமாகக் கருதப்படுகிறது. சுமார் 300 கிலோ எடைக் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம், இரண்டாயிரத்து 800 அடி நீளமுள்ள செயற்கை பைன் கிறிஸ்துமஸ் மாலைகளால் மூடப்பட்டுள்ளது.
இதில் ஆயிரத்து 500 வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தேவாலயத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரம், ஒவ்வொரு ஆண்டும் 'லூர்து எல்ஃப்' (Lourdes Elf) குழுவினரால் சுமார் 20 ஆயிரம் ரிங்கிட் செலவில் வடிவமைக்கப்படுகிறது.
தங்களின் சொந்த காணிக்கை அடிப்படையில் இந்த மரத்தை உருவாக்கியிருப்பதாக அக்குழுவின் தலைவர் அலெக்சண்டர் ஜோசப் தெரிவித்தார்.








