கோலாலம்பூர், நவம்பர்.26-
புதிய தலைமுறையினருக்கான மைகாட் அட்டையில் QR குறியீடு பதிக்கப்படும் என்று உள்துறை துணையமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் புதிய மைகாட் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த QR குறியீடு நவீன பாதுகாப்பு தரநிலைகளுக்கு ஏற்ப, போலியான ஆவணங்கள் மற்றும் மைகாட்டைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது என்று இன்று மக்களவையில் அவர் விளக்கினார்.
QR குறியீடு பொருத்தப்படுவது மூலம் ஒவ்வொரு மைகாட் அட்டையின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
மைகாட் QR குறியீடு என்பது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். மைகாட் அட்டை உண்மையானதா? என்பதை டிஜிட்டல் முறையில் இது உறுதிப்படுத்துகிறது என்று ஷாம்சுல் அனுவார் நசாரா விளக்கினார்.








