கோலாலம்பூர், அக்டோபர்.22-
கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில், எந்தவித கலகச் செயல்களிலும் ஈடுபட வேண்டாமென பொதுமக்களுக்கு கோலாலம்பூர் போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இம்மாநாடு வரும் அக்டோபர் 26 முதல் 28 -ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, தடையின்றி நடைபெற, பொதுமக்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
மாநாடு நடைபெறும் இடத்தில் எந்தவித இடையூறும் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.