Sep 15, 2026
Thisaigal NewsYouTube
டாதாசோனிக் நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் இல்லை – அரசாங்கம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

டாதாசோனிக் நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் இல்லை – அரசாங்கம் விளக்கம்

Share:

மக்களின் அடையாளம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் டாதாசோனிக் தெக்னோலோஜிஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் இல்லை என மடானி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களில் வெளியான கையகப்படுத்தல் தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அடையாளத் தகவல்கள் நாட்டின் மிக முக்கியமான மூலோபாய சொத்துகளில் ஒன்றாகும் என எம்கேஎன் குறிப்பிட்டுள்ளது.

எனவே, மக்களின் அடையாளத் தகவல்களின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாகும்.

இது தொடர்பான நடவடிக்கைகள் சட்டம், நிதி, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான கட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் எம்கேஎன் கூறியுள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தொடர்ந்து உறுதி பூண்டிருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related News