Sep 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா–புருணை இடையே ஒரே குடிநுழைவு சோதனைச் சாவடி குறித்து பரிசீலனை
தற்போதைய செய்திகள்

மலேசியா–புருணை இடையே ஒரே குடிநுழைவு சோதனைச் சாவடி குறித்து பரிசீலனை

Share:

மலேசியா மற்றும் புருணை நாடுகளுக்கு இடையே மக்கள் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில், குடிநுழைவு நடைமுறைகளை ஒருங்கிணைத்து ஒரே சோதனைச் சாவடி முறையை அமல்படுத்துவது குறித்து கொள்கை அளவில் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

தற்போதைய குடிநுழைவு நடைமுறைகள் நீண்ட நேரம் எடுப்பதால், பயணிகள் இரு நாடுகளிலும் பல சோதனைச் சாவடிகளை கடக்க வேண்டியுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஒரே சோதனைச் சாவடி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இரு நாடுகளின் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இரு நாடுகளின் நில எல்லையை முழுமையாக அளவீடு செய்து வரையறுக்கும் பணியை 2034ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தகவல் பகிர்வை வலுப்படுத்தவும், சரவாக்கில் வர்த்தக நெல் சாகுபடி மற்றும் புருணை–சரவாக் மின்சார இணைப்புத் திட்டத்தில் ஒத்துழைப்பைத் தொடரவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியா–புருணை இடையே ஒரே குடிநுழைவு சோதனைச் சாவடி குறித்த... | Thisaigal News