கோலாலம்பூர், ஜனவரி.28-
மலாக்காவில் உள்ள ராணுவ முகாம் ஒன்றிற்குப் பொருட்களை விநியோகம் செய்யும் ஒப்பந்தம் தொடர்பாக, சுமார் ஒரு லட்சத்த 50 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டது மற்றும் பெற்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மற்றொரு ராணுவ உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த முகாமில் உயர் பதவியில் இருந்த அந்த அதிகாரி, 2024-ஆம் ஆண்டில் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக கைம்மாறாக இந்த லஞ்சப் பணத்தைக் கேட்டதாக நம்பப்படுகிறது. ஐந்து நிறுவனங்களிடமிருந்து அவர் இந்தப் பணத்தைப் ரொக்கமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கையை மலாக்கா எஸ்பிஆர்எம் இயக்குனர் Adi Supian Shafie உறுதிப்படுத்தியுள்ளார்.








