கோலாலம்பூர், ஜனவரி.28-
6 வயதுடைய சிறுவர்கள் உட்பட 2027-ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பதிவு வரும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 31 வரை நடைபெறும்.
மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பதிவுகளை MOEIS எனப்படும் Integrated Management System இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
மலேசியக் பிரஜைகளாக இருக்கும் பின்வரும் வயதுக் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இந்தப் பதிவு திறக்கப்பட்டுள்ளது:
• 6 வயது அல்லது 5 வயது பிளஸ் (5+): 2 ஜனவரி 2021 முதல் 31 டிசம்பர் 2021-க்குள் பிறந்தவர்கள்.
• 7 வயது அல்லது 6 வயது பிளஸ் (6+): 2 ஜனவரி 2020 முதல் 1 ஜனவரி 2021-க்குள் பிறந்தவர்கள்.
"2027 முதல் 6 வயது அல்லது 5 வயது பிளஸ் (5+) பூர்த்தியான குழந்தைகள், எந்தவொரு தகுதித் தேர்வோ அல்லது நுழைவுத் தேர்வோ இன்றி நேரடியாகவும் தன்னார்வத்துடனும் முதலாம் ஆண்டில் இணையலாம் என்ற அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.








