பாயான் லெப்பாஸ், நவம்பர்.24-
பூட்டப்பட்ட வீடொன்றில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணியளவில் பினாங்கு, பாயான் லெப்பாஸ், லெபோ நீப்பா 3 என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படை தகவல்கள் கூறுகின்றன.
தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரத்தியேகச் சாதனத்தைப் பயன்படுத்தி வீட்டின் கதவைத் திறந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
வீட்டிற்குள் 89 வயது முதியவரின் உடல் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








