Jan 2, 2026
Thisaigal NewsYouTube
குப்பைக் கொட்டியதற்காக "சமூகச் சேவை" தண்டனை: மலாக்காவில் முதல் முறையாக 5 பேர் சிக்கினர்!
தற்போதைய செய்திகள்

குப்பைக் கொட்டியதற்காக "சமூகச் சேவை" தண்டனை: மலாக்காவில் முதல் முறையாக 5 பேர் சிக்கினர்!

Share:

மலாக்கா, ஜனவரி.02-

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது Encore Melaka பகுதியில் சிகரெட் துண்டுகளையும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் வீசிய 5 ஆடவர்கள், புதிய சட்டத்தின் கீழ் 'சமூகச் சேவை' தண்டனைக்கு உள்ளாகும் முதல் நபர்களாக மாறியுள்ளனர். 2007-ஆம் ஆண்டு திடப்பொருள் மேலாண்மை, பொதுத் தூய்மைச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், மலாக்காவைச் சேர்ந்த 20 முதல் 60 வயதுடைய இந்த 5 பேர் உட்பட மொத்தம் 42 பேர் பிடிபட்டுள்ளனர்.

பிடிபட்டவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு அவர்கள் பொது இடங்களைச் சுத்தம் செய்யும் சமூகச் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என SWCorp நிறுவனம் துணைத் தலைமைச் செயல்முறை அதிகாரி, Zulkifli Tamby Chik தெரிவித்தார். இனி வரும் காலங்களில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது இத்தகைய சமூகச் சேவைத் தண்டனை விதிக்கப்படும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News