Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பெர்சே பேரணியில் பங்கேற்காதீர் பொதுமக்களுக்குக் காவல் துறை அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

பெர்சே பேரணியில் பங்கேற்காதீர் பொதுமக்களுக்குக் காவல் துறை அறிவுறுத்து

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 26 -

பெர்சேவின் 100 விழுக்காடு சீர்த்திருத்த கோரிக்கைப் பேரணியில் பங்கேற்க வேண்டாம் என பொதுமக்களை காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த உத்தேசப் பேரணி 2012 ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மாஜிட் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்தின் 9 ஆவது பிரிவுக்கேற்ப பேரணி ஏற்பாட்டாளர்களிடமிருந்து தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்று அவர் சொன்னார். சீர்திருத்தக் கொள்கைகளை அமல் செய்யும்படி அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் தேசிய நினைவுச் சின்னத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு ஊர்வலமாகச் செல்லும் இந்த பேரணியில் கலந்து கொள்ளும்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் போஸ்டர்களை பேரணி ஏற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளதாக டத்தோ அலாவுடின் தெரிவித்தார்.

இந்த பேரணியில் கலந்து கொள்வோருக்கு எதிராக நடப்பு சட்டவிதிகளுக்கு ஏற்ப கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு