Sep 7, 2026
Thisaigal NewsYouTube
2030-க்குள் பொருளாதாரத்தை மேம்படுத்த 'இரண்டாவது சிலாங்கூர் திட்டம்': மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சமர்ப்பிப்பு
தற்போதைய செய்திகள்

2030-க்குள் பொருளாதாரத்தை மேம்படுத்த 'இரண்டாவது சிலாங்கூர் திட்டம்': மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சமர்ப்பிப்பு

Share:

நாட்டில் மிக வளர்ச்சி கண்டு வரும் மாநிலமான சிலாங்கூரை, 2030ஆம் ஆண்டிற்குள் ஆசியான் பிராந்தியத்தின் பொருளாதார முன்மாதிரியாக மாற்றுவதை இலக்காகக் கொண்ட 'இரண்டாவது சிலாங்கூர் திட்டமான RS-2 ஐ- மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சமர்ப்பித்துள்ளார். இது 2021 முதல் 2025 வரை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட முதலாவது திட்டத்தின் தொடர்ச்சியாகும்.

2026 முதல் 2030 வரையிலான இந்த 5 ஆண்டு காலப் பொருளாதார மற்றும் சமூகத் திட்டமானது, சிலாங்கூரின் பொருளாதார மதிப்பை 600 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 200 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், சிலாங்கூர் மக்களின் சராசரி மாத வருமானம் 14,500 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்றும் மந்திரி பெசார் தெரிவித்துள்ளார்.

இதற்காக, செமிகண்டக்டர், விண்வெளித் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கேரி தீவின் மூன்றாவது துறைமுகம் போன்ற முக்கியத் துறைகளில் மாநில அரசு கவனம் செலுத்தவுள்ளது. மாநில மற்றும் மத்திய அரசின் நிதி, தனியார் முதலீடுகள் என மொத்தம் 33.31 பில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டில் இந்த இரண்டாவது சிலாங்கூர் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவுள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து