Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்தவே அந்த முடிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்தவே அந்த முடிவு

டிச.3-


நாட்டின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டியூபிஎஸ்ஆர் மற்றும் PT3 ஆகிய அரசாங்கத் தேர்வுகளை ரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்க்கமான முடிவானது, நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு முன்முயற்சியாகும் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.

மாணவர்களின் கற்றல், கற்பித்தல் கல்வி நடைமுறையானது, தேர்வு முறையை அடிப்படையாக கொண்டு இருக்கக்கூடாது என்ற நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் Fadhlina Sidek இதனை குறிப்பிட்டார்.

மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சி என்பது யூபிஎஸ் மற்றும் PT3 தேர்வுகளினால் மட்டும் தீர்மானிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

அதேவேளையில் தொடக்கப்பள்ளிகளுக்கான் யூபிஎஸ்ஆர் தேர்வையும், இடைநிலைப்பள்ளிகளுக்கான PT3 தேர்வையும் ரத்து செய்யப்படுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தம்முடைய முடிவு அல்ல என்றும், அதனை புத்ராஜெயா முடிவு செய்தது என்பதையும் மக்களவையில் தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக Fadhlina Sidek விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →