Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பெண் குழந்தை கொலை வழக்கு:  பெண்மணி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது!
தற்போதைய செய்திகள்

பெண் குழந்தை கொலை வழக்கு: பெண்மணி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது!

Share:

ஒரு வயது 11 மாத பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நூர் சுஹைதா ஜமாலுத்தீன் என்ற 32 வயது குழந்தை பராமரிப்பாளர் பெண் மீது இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயான இவர், கடந்த மே 18-ஆம் தேதி காலை 9.31 மணி முதல் 11.24 மணி இடைப்பட்ட நேரத்தில், சிப்பாங், தாமான் புத்ரா பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தைப் புரிந்ததாக மாஜிஸ்திரேட் கைராத்துல் அனிமா ஜெலானி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Related News