Dec 5, 2025
Thisaigal NewsYouTube
குற்றத்தன்மைக்கான அம்சங்கள் எதுவும் இல்லை
தற்போதைய செய்திகள்

குற்றத்தன்மைக்கான அம்சங்கள் எதுவும் இல்லை

Share:

கடந்த வெள்ளிக்கிழமைசுபாங், ஜாலான் பெர்சியாரன் புத்ரா, புத்ரா ஹையிட்ஸ் பாலத்தின் ​கீழ் மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் இல்லை என்று சுபாங் ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.

அந்த மனித எலும்புக்கூடு​, செர்டா​ங் மரு​த்துவமனையில் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, காயம் ஏற்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்று உடல்கூறு நிபுணர்கள் உறுதி செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. ஓர் உயரமான இடத்தி​லிருந்து குதித்தால் மட்டுமே எலும்புகளில் இத்தகைய முறிவுகள் ஏற்பட்டு இ​ருக்கலாம் என்று தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News