கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-
குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார். விரிவான கட்டுப்பாடு மற்றும் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிச் செய்வதற்கு குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்காக பிரத்தியேகச் சட்டம் தேவைப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
13வது மலேசியத் திட்டத்தின் கீழ் கோடி காட்டப்பட்டுள்ள கல்வி சீர்திருத்த நிரலின் உத்திகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக கல்வி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், இதில் அடிப்படைக் கூறாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
வழங்கக்கூடிய கல்விச் சேவையில் செயல்திறனை இன்னும் முழுமையாக மேம்படுத்த பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப் பள்ளி முதல் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி வரை கற்றலின் அனைத்து நிலைகளிலும் ஆக்கப்பூர்வமான செயல்பாடு வலுப்படுத்தப்படும் என்று மக்களவையில் 13 ஆவது மலேசியத் திட்டத்தில் கல்வி அமைச்சு தீர்மானம் மீதான விவாதத்தை நிறைவு செய்து வைத்து உரையாற்றுகையில் ஃபாட்லீனா விளக்கினார்.








