Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சம்மன்களுக்கு 50 வெள்ளி அபராதத் தொகை
தற்போதைய செய்திகள்

சம்மன்களுக்கு 50 வெள்ளி அபராதத் தொகை

Share:

போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன்களுக்கு வெறும் 50 வெள்ளி அபராதத் தொகை விதிக்கும் சிறப்புக்கட்டண சலுகை இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது.

அரச மலேசிய போலீஸ் படையின் இந்தச் சிறப்புக்கட்டண சலுகையை மக்கள் இன்று முதல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வாகனமோட்டிகள் தீர்வு காண முடியாத சம்மன்களுக்குக் குறைந்த கட்டணத்தை செலுத்தி தீர்வு காண்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அரச மலேசிய போலீஸ் படை இன்று தொடங்கி சுமார் ஒரு மாத காலத்திற்கு இந்த சிறப்பு சலுகையை நடைமுறைப்படுத்தியிருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து போலீஸ் பிரிவின் இயக்குநர் மாட் காசிம் கரிம் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் மட்டுமே தீர்வு காண முடியும் என்ற சம்மன்களைத் தவிர்த்து மற்ற அனைத்து சம்மன்களுக்கும் தீர்வு காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார். ஹரிராயா பெருநாளை முன்னிட்டு அரசாங்கம் முதல் முறையாக வழங்கியுள்ள இந்த அரிய வாய்ப்பைப் பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாட் காசிம் கரிம் அறிவுறுத்தினார்.

Related News