May 21, 2026
Thisaigal NewsYouTube
காருக்குள் சடலம், ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

காருக்குள் சடலம், ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கலாம்

Share:

டாமன்சாராவில் Car Boot Sale Damansara என்ற இடத்திற்கு அருகில் நேற்று, கார் ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் அந்நபர், ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்ய போலீசார் விரும்புவதாக பெட்டாலிங் ஜெயா, மாவட்ட போலீஸ் தலைவர் M. Hussin Sollehuddin Zolkfly தெரிவித்தார்.

நேற்று மதியம், Car Boot sale Damansara – விற்கு வருகை தந்தவர்கள், அங்கே நிறுத்தப்பட்டுள்ள காருக்குள் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானதுடன் இது குறித்து போலீசுக்கு தகவல் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News