குடிநுழைவு சட்டத்தை மீறியதாக கூறப்படும் 216 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் கெனித் தான் அயில் கியாங் தெரிவித்தார்.
அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஓப்ஸ் சபோங் என்ற இந்த சோதனை நடவடிக்கையில் பிடிபட்டவர்களில் 71 பேர் பெண்கள் ஆவர். இதர அரசாங்க ஏஜென்சிகளுடன் இணைந்து 50 சோதனைகள் உட்பட மொத்தம் 74 சோதனைகள் நடத்தப்பட்டன.
ஆயிரத்து 597 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நிபந்தனைகள் மீறல் தொடர்பில் 216 பேர் கைது செய்யப்பட்டதாக கெனித் தான் அயில் கியாங் குறிப்பிட்டார்.







