Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்கத்தான் நேஷ்னல் கூட்டணி வெற்றிக்காக தான் பேட்டியிட தயார்
தற்போதைய செய்திகள்

பெரிக்கத்தான் நேஷ்னல் கூட்டணி வெற்றிக்காக தான் பேட்டியிட தயார்

Share:

எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில், தான் போட்டியிடுவதினால், பெரிக்காத்தான் நெசனல் கூட்டணிக்குப் பெரிய அளவிலான வெற்றி கிட்டும் எனில், தான் போட்டியிட தயார் என ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஷஹீடான் கசிம் அறைகூவல் விடுத்துள்ளார்.

71 வயதான ஷஹீடான் கசிம், எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில் பெரிக்கத்தான் நெசனல், கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களைக் கைப்பற்றி பெரிய அளவிலான வெற்றி அலையை உருவாக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை உண்டு என அவர் கூறினார். இந்த மாநிலங்கள் பெரிக்காத்தான் நேஷ்னல் கைகளுக்கு வருவதற்காக தான் எந்த இடத்திலும் போட்டியிட தயார் என ஷஹிடான் கூறினார்.

எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில் ஷஹிடான் கசின் சிலாங்கூர் மாநிலத்தின் செமினி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News