Nov 28, 2026
Thisaigal NewsYouTube

சித்தியவான், ஆயர் தாவாரில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சித்தியவான், ஆயர் தாவாரில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பேராக் மாநிலத்தில் சித்தியவான் மற்றும் ஆயர் தாவார் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய கும்பல், வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த சம்பவங்கள் தொடர்பாக, இந்தோனேசிய நாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் கூறுகையில், இரண்டு ஆயுதக் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் நான்கு வீடுகளில் திருட முயன்ற சம்பவங்கள் தொடர்பாக தங்களுக்குப் புகார்கள் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்திருந்த சந்தேக நபர்கள், நீண்ட கத்திகளுடன் அதிகாலை நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களைக் கட்டிப் போட்டு, செல்போன், நகைகள், ரொக்கம் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →