Nov 28, 2026
Thisaigal NewsYouTube

காஜாங் நகைக்கடையில் துணிகரக் கொள்ளை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காஜாங் நகைக்கடையில் துணிகரக் கொள்ளை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

காஜாங், பண்டார் தெக்னோலோஜி காஜாங் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் தங்க நகைக்கடையில் நேற்று வெள்ளிக்கிழமை துணிகரக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

கத்திகள் மற்றும் சுத்தியல்களுடன் வந்த மூன்று ஆடவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று பிற்பகல் 2.23 மணிக்கு போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்ளையைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு இன்னும் தெரியாத நிலையில், தலைமறைவாக உள்ள மூன்று சந்தேக நபர்களையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சித்தியவான், ஆயர் தாவாரில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சித்தியவான், ஆயர் தாவாரில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

2027 சீ விளையாட்டுப் போட்டியில் கூடுதல் போட்டிகளைச் சேர்க்க மலேசியா ஆதரவு

2027 சீ விளையாட்டுப் போட்டியில் கூடுதல் போட்டிகளைச் சேர்க்க மலேசியா ஆதரவு

ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்

நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்

டிஆர்எக்ஸ் அருகே 4,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் புதிய பாரம்பரியப் பள்ளிவாசல்

டிஆர்எக்ஸ் அருகே 4,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் புதிய பாரம்பரியப் பள்ளிவாசல்

பாதி வேகவைத்த கோழி உணவு: 11 மாணவர்கள் பாதிப்பு! பள்ளி சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடல்

பாதி வேகவைத்த கோழி உணவு: 11 மாணவர்கள் பாதிப்பு! பள்ளி சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடல்