Nov 27, 2026
Thisaigal NewsYouTube

நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்

மலேசியர்களின் அடையாள அட்டைகளான மைகாட் பெருமளவில் நேபாளத்தில் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை தேசியப் பதிவுத் துறையான ஜேபிஎன் மறுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் காட்டப்படும் ஆவணங்கள் மலேசிய மைகாட் அடையாள அட்டைகள் அல்ல என்றும், அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் ஜேபிஎன் தெரிவித்துள்ளது.

மேலும், தவறான தகவலைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் அதிகாரப்பூர்வப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி, பொது அமைதியைப் பாதிக்கக்கூடும் என ஜேபிஎன் எச்சரித்துள்ளது.

எனவே, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும், துல்லியமான தகவல்களுக்கு ஜேபிஎன்னின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

டிஆர்எக்ஸ் அருகே 4,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் புதிய பாரம்பரியப் பள்ளிவாசல்

டிஆர்எக்ஸ் அருகே 4,500 பேர் தொழுகை நடத்தும் வகையில் புதிய பாரம்பரியப் பள்ளிவாசல்

பாதி வேகவைத்த கோழி உணவு: 11 மாணவர்கள் பாதிப்பு! பள்ளி சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடல்

பாதி வேகவைத்த கோழி உணவு: 11 மாணவர்கள் பாதிப்பு! பள்ளி சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடல்

2027 வரவு செலவுத் திட்டத் திட்டங்கள் ஜனவரி 1ஆம் தேதியே தொடங்க வேண்டும்! பிரதமர் அன்வார் உத்தரவு

2027 வரவு செலவுத் திட்டத் திட்டங்கள் ஜனவரி 1ஆம் தேதியே தொடங்க வேண்டும்! பிரதமர் அன்வார் உத்தரவு

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: கைதானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

விமானப்படை போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: கைதானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

பகாங் மாநில விருதுப் பட்டியலில் முறைகேடு: இரு முன்னாள் அரசு ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை!

பகாங் மாநில விருதுப் பட்டியலில் முறைகேடு: இரு முன்னாள் அரசு ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை!