Nov 27, 2026
Thisaigal NewsYouTube

ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

மலேசியாவில் பணியாற்றும் ஏர் ஏசியா ஊழியர்களுக்கு, நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியிலேயே சம்பளம் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு மாதத்தின் இரண்டாம் பாதியில் முன்கூட்டியே வழங்கப்பட்ட சம்பளம், இனி ஒவ்வொரு மாதமும் 30ஆம் தேதி அல்லது பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் வழங்கப்படும் என உள்நாட்டு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் விமான எரிபொருள் செலவுகள் மற்றும் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் தற்காலிக நடவடிக்கையாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் ரொக்கம் மற்றும் வங்கிக் கையிருப்பு 905 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது.

மேலும், நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் லாபமற்ற விமானச் சேவை வழித்தடங்களை நிறுத்துவதுடன், 25 விமானங்களை குத்தகை நிறுவனங்களிடம் திருப்பி ஒப்படைக்கவும் ஏர் ஏசியா திட்டமிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →