Oct 9, 2026
Thisaigal NewsYouTube

லவ் ஸ்கேமில் சிக்கி மாது 3 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லவ் ஸ்கேமில் சிக்கி மாது 3 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்

ஜார்ஜ்டவுன், ஜூன்.27-

முகநூலில் அறிமுகமான ஆடவருடன் லவ் ஸ்கேமில் சிக்கிய 45 வயது பெண் நிர்வாகி ஒருவர், மூன்று லட்சம் ரிங்கிட்டை இழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முகநூலில் அறிமுகமான ரிச்சர்ட் மிங் லி என்ற ஆடவருடன் காதல் வயப்பட்டு அந்த மாது, மூன்று லட்சம் ரிங்கிட்டைப் பறி கொடுத்த பின்னரே தாம் லவ் ஸ்கேம் மோசடியில் சிக்கி மோசம் போனதை உணர்ந்துள்ளார் என்று பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

அந்த நபர், தன்னை அமெரிக்காவில் வசிக்கும் தொழிநுட்ப முனைவர் என்று கூறிக் கொண்டதால், அந்த நபருடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார்.

எனினும் அந்த நபரின் கணக்கு முடக்கப்பட்டு விட்டதாக அவர் கூறிய பொய்யுரையின் பின்னணியை ஆராயாமல் அவரின் வங்கிக் கணக்கிற்கு அந்த மாது பணத்தைப் பட்டுவாடா செய்ததாக தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று டத்தோ முகமட் அல்வி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →