கோத்தா திங்கி, ஆகஸ்ட்.06-
பேருந்திலிருந்து இறங்கி, அவசர அவசரமாகச் சாலையைக் கடக்க முற்பட்ட மாது ஒருவர், காரினால் மோதப்பட்டு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4.10 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, ஜாலான் சுங்கை ரெங்கிட் சாலையில் நிகழ்ந்தது.
42 வயது மாது, கடுமையான காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.








