ஆயர் குரோ, செப்டம்பர்.13-
லஞ்சப் பணத்தில் சொந்த நகைக் கடையைத் திறந்த மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. அந்த இரு குடிநுழைவு அதிகாரிகளான கணவன்- மனைவியும் அந்நிய நாட்டவர்களை எந்தவொரு செல்லத்தக்க பத்திரமின்றியும் சோதனையின்றியும் மலேசியாவிற்குள் நுழைய விட்டு, அதன் வாயிலாக லஞ்சப் பணம் பெற்று வந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சுமார் 6 லட்சம் ரிங்கில் முதலீட்டில் அந்தப் பெண் அதிகாரியின் தம்பி மற்றும் அத்தம்பதியினரின் மகன்கள் பெயரில் நகைக் கடை திறக்கப்பட்டு இருப்பது ஓப் டிகோ என்ற சோதனை நடவடிக்கையின் வழி எஸ்பிஆர்எம் கண்டுபிடித்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 5 நாள் தடுப்புக் காவல் அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.








