பொதுச் சேவைத்துறையில் பணியாற்றி வருகின்றவர்கள் அனைவரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மலேசியாவின் பாத்தேக் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் அரசு ஊழியர்கள், வியாழக்கிழமையை தவிர்த்து மற்ற தினங்களிலும் மலேசிய பாத்தேக் ஆடை அணிவது ஊக்குவிக்கப்படுவர் என்று பொதுச் சேவைத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமது தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை நேற்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் பாத்தேக் ஆடை அணிவது, கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் பொதுச் சேவைத்துறை ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


