Oct 2, 2026
Thisaigal NewsYouTube

சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கை: திரங்கானுவில் 5 ஆண்டுகளில் 113 வியட்னாமியப் படகுகள் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கை: திரங்கானுவில் 5 ஆண்டுகளில் 113 வியட்னாமியப் படகுகள் பறிமுதல்

கோல திரங்கானு, நவம்பர்.15-

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில், திரங்கானு கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட, 113 வியட்னாமியப் படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மழைக் காலங்களில் திரங்கானு கடலில் கிடைக்கும், உயர் தர மீன் வகைகளுக்காக, வியட்னாமிய மீனவர்கள், பேரலைகளையும் பொருட்படுத்தாமல் திரங்கானு கடல் எல்லைகளுக்குள் வருவதாக நம்பப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், 9 வியட்னாமியப் படகுகளை, மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியும், மாநில மீன்வளத்துறையும் தடுத்து வைத்துள்ளதாக அம்மாநில வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில், உணவுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பொருட்கள் குழுவின் தலைவர், டத்தோ டாக்டர் அஸ்மான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வியட்னாமிய மீன்பிடி படகுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 225 மில்லியனுக்கு அதிகம் என்றும் ஜாபி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் அஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →