Dec 13, 2025
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் வெள்ளச் சேதத்தால் 150 மில்லியன் ரிங்கிட் இழப்பு
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் வெள்ளச் சேதத்தால் 150 மில்லியன் ரிங்கிட் இழப்பு

Share:

கங்கார், டிசம்பர்.13-

கடந்த மாதம் பெர்லிஸைத் தாக்கிய வெள்ளத்தால், கிட்டத்தட்ட150 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்கட்டமைப்பு, வீடுகள், விவசாயம், உள்ளூர் வணிகங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை இந்த வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

என்றாலும், வெள்ள சேதம் குறித்த தொடக்க மதீப்பீடான 230 மில்லியன் ரிங்கிட்டை விட, இது குறைவு என்று பெர்லிஸ், மாநில செயலாளர் ரஹிமி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் திசை திருப்பல் அமைப்பானது, இந்த இழப்பை பெருமளவில் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெர்லிஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், மொத்தம் 38 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஹிமி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News