ஜார்ஜ்டவுன், செப்டம்பத்.18-
பினாங்கு ஜாலான் பினாங்கில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில், சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், அங்கு மிக அசுத்தமான நிலை கண்டுபிடிக்கப்பட்டதால், அதனை 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தின் சமையலறையில், மசாலா பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில், எலி, கரப்பான் பூச்சிகள் போன்றவற்றின் கழிவுகள் காணப்பட்டதாகவும், சில கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், குளிரூட்டப் பெட்டிகளில், இறைச்சி, கோழி, காளான் போன்ற உணவுப் பொருட்கள் முறையான கலன்களில் வைக்கப்படாமல், நேரடியாக வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, அந்த உணவக உரிமையாளருக்கு மொத்தம் 3,000 ரிங்கிட் வரை மூன்று அபராதங்கள் விதிக்கப்பட்டதோடு, உணவு சட்டம் 1983–இன் பிரிவு 11ன் கீழ், 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.








