பேரா மாநிலத்தில் ட்ரோனொ அருகில் செரி இஸ்கன்டாரில் புதிய விமான நிலையம் நிர்மாணிக்கப்படவிருப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் ஆங்கீகாரத்திற்காக மாநில அரசாங்கம் காத்திருப்பதாக மந்திரி பெசார் டத்தோ செரி சாரானி முஹமாட் தெரிவித்துள்ளார்.
பேரா மாநிலத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான பரிந்துரையை மாநில அராசங்கம், மத்திய அரசாங்கத்திடம் வைத்து விட்டது. விமான நிலையம் கட்டும் அளவிற்கு போதுமான நிலப்பரப்பளவை மாநில அரசாங்கம் கொண்டிருந்த போதிலும் இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் திட்டமாக இருப்பதால் போக்கு வரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அங்கீகாரத்திற்காக தாங்கள் காத்திருப்பதாக சாரானி முஹமாட் குறிப்பிட்டார்.








