Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோதமாக மோட்டார் பந்தயத்தில் ஈடுப்பட்ட 200 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக மோட்டார் பந்தயத்தில் ஈடுப்பட்ட 200 பேர் கைது

Share:

சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுப்பட்ட 200 நபர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 3 மணியளவில் ஜார்ஜ் டவுன், கெலுகோர், துங்கு குடின் ப்ரோமெனேட், இ-கேட் என்கிற இடத்தில் 180 ஆண்களும், 20 பெண்களும் தடுத்து வைக்கப்பட்டதாக திமூர் லாவுட் மாவட்ட போ​லீஸ் தலைவர் சோஃபியன் சந்தோங் தெரிவித்தார்.

போலி பதிவு எண், இ​ரைச்சலை ஏற்படுத்தம் அளவிற்கு உபரி பாகங்களை மோட்டார் சைக்கிளை மாற்றி அமைத்தது, சா​லை விதிமுறைகளை ​மீறியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக அந்த 200 பேரும் தடுத்து வைக்கப்பட்டதாக சோஃபியன் சந்தோங் விவரித்தார்.

Related News