உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் சலாஹுடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த ஜொஹூர்,புலாய் நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திடம் மக்களவை தெரிவித்துள்ளது. கூட்டரசு அரசிலமைப்புச் சட்டம் 54 ஆவது பிரிவின் கீழ் காலியான புலாய் நாடாளுமன்றத் தொகுதியில் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி, அத்தொகுதி நிரப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக மக்களவை சபா நாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார். கடந்த ஜுலை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சலாஹுடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து பூலாய் தொகுதி காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர்ரிடம் இன்று ஜுலை 25 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சபா நாயகர் ஜொஹாரி அப்துல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


