புத்ராஜெயா, அக்டோபர்.05-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், இன்று நிதி அமைச்சில் மடானி பட்ஜெட் 2026க்கான இறுதித் தயாரிப்புப் பணிகளில் கவனம் செலுத்தினார். நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், வரவிருக்கும் வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக கருவூல அணியுடன் இணைந்து அமர்வை நடத்தியதாகத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் சுருக்கமாக அறிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை நாட்டின் நான்காவது மடானி பட்ஜெட் ஆகும். நாட்டிற்கான அடுத்த ஆண்டின் நிதித் திட்டங்களையும் முக்கிய அறிவிப்புகளையும் உள்ளடக்கிய இந்த வரவு செலவுத் திட்டம் அறிக்கை, வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அன்வார் இப்ராஹிமால் தாக்கல் செய்யப்பட உள்ளது.








