Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சில நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சில நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது

டிச. 29-

சிரம்பான் Tuanku Ja’afar, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தாலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வருகை காரணமாகவும் , சில நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது என எகிரி செம்பிலான் மாநில சுகாதார இயக்குநர் Datuk Dr Harlina Abdul Rashid தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 26ஆம் நாளன்று இந்த பிரச்சினையை அம்மருத்துவமனை சந்தித்தது. மாநில சுகாதாரத் துறையும் மருத்துவமனை நிர்வாகமும் இந்த தாமதத்தை ஒப்புக்கொண்டன.

தீ விபத்து மருத்துவமனையின் செயல்பாட்டுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. அவசர சிகிச்சைப் பிரிவில் அதிக நோயாளிகள் இருந்ததும், வார்டில் காலியான படுக்கைகள் இல்லாததும் தாமதத்திற்கு முக்கிய காரணங்களாகும்.

நெரிசலைக் குறைக்க, 6 படுக்கைகள் கொண்ட discharge lounge' ஐயும் 12 படுக்கைகள் கொண்ட holding bay'ஐயும் தற்காலிக வார்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. தாமதத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்த வழிமுறை கையாளப்பட்டது என Dr Harlina குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க, அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு Shiftஇன் சூழ்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால், பிற மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள். என்றார். மேலும், லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள் அருகிலுள்ள சுகாதார கிளினிக்குகளில் சிகிச்சை பெற Dr Harlina அறிவுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்