Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வீடு புகுந்து கொள்ளை; ஜோடி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீடு புகுந்து கொள்ளை; ஜோடி கைது

மலாக்கா, ஜூன்.21-

இவ்வாண்டு ஜனவரி முதல் மலாக்கா, கோலாலம்பூர், சிலாங்கூரில் வீடு புகுந்து கொள்ளையடித்த ஏழு வழக்குகளில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

24 மற்றும் 31 வயதுடைய அவ்விருவரும் இம்மாதம் ஜூன் 4-ஆம் தேதி, பேராக் கோல குராவில் கைது செய்ததாக மலாக்கா தெங்கா போலீஸ் படைத் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

மே 28 அன்று, மலாக்கா தெங்கா மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்தது தொடர்பில் இரு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக அவர் கூறினார்.

வேலையில்லாத அந்த ஜோடி, வீடு புகுந்து மின்சாதனங்கள் மற்றும் தளவாடங்களைத் திருடி வந்துள்ளனர்.

வீடு புகுந்ததற்காகத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457 மற்றும் கொள்ளைக்கானத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 392 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →