தாம் உட்பட தமது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உள்நாட்டு வருமான வரி வாரியத்தினால் முடக்கப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் குற்றஞ்சாட்டினார்.
தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்குதல் அளிக்கும் நோக்கில் இந்த முடக்கம் அமைந்திருப்பதாக முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.
இந்த நெருக்குதலும், தலையீடும் மத்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதாகும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் மக்களின் அபரிமித ஆதரவை பெற்றுவருவதை தொடர்ந்து அதனை ஒடுக்கும் நடவடிக்கையாக இந்த வங்கி கணக்கு முடக்கம் அமைந்திருப்பதாக ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


