கோலாலம்பூர், செப்டம்பர்.05-
மெட்ரிக்குலோஷன், எஸ்டிபிஎம் உட்பட அவற்றுக்கு ஈடான கல்வியை முடித்தவர்களில் 78 ஆயிரத்து 883 பேர், அரசாங்க பொது பல்கலைக்கழகங்களில் இட வாய்ப்பு கிடைத்துள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாண்டில் UPUOnline மூலமாக அரசாங்க பொது பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 866 மனுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அது தெரிவித்தது.
இந்த முறை இளங்கலை பட்டப்படிப்பிற்காக ஆயிரத்து 132 கல்வித் திட்டங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








