Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முகமூடி கும்பல் தாக்குதல்/ ஆடவர் வெட்டிக்கொல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

முகமூடி கும்பல் தாக்குதல்/ ஆடவர் வெட்டிக்கொல்லப்பட்டார்

Share:

ஜாசின் , ஆகஸ்ட் 26-

மலாக்கா, ஜாசின், ரிம் என்ற இடத்தில் உள்ள ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தில் முன்புறம், முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நடத்திய தாக்குதல் சம்பவத்தில் ஆடவர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த முகமூடி கும்பல். இளைஞர் ஒருவரை, ஜாசின் மருத்துவமனை வரை விரட்டிச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.

ஜாசின் மருத்துவமனையில் நிகழ்ந்த அந்த சண்டைக்காட்சியை சித்தரிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச்சம்பவத்தில் வெட்டுக்கத்தியை ஆயுதமாக கொண்ட அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் 24 வயது இளைஞர் கொல்லப்பட்டதாக அஹ்மத் ஜமீல் குறிப்பிட்டார்.

Related News