விலை வாசி உயர்வு கண்டு வரும் இவ்வேளையில் தோட்டத் தொழிலாளர்கள் பச்சை புத்தகத் திட்டமான தோட்டங்களில் காய் கறி விவசாயத்தை தொடங்குவதற்கு முன் வர வேண்டும் என்று சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் வை.தாமாசேகரன் கேட்டுக்கொண்டார்.
கோலசிலாங்கூர் கம்போங் பாரு தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தோட்டத் தொழிலாளர்கள் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய போது தாமாசேகரன் இதனை வலியுறுத்தினார். தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான வழக்கு தொழிலியல் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசி உயர்வை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தோட்டத்திலும் தனிப்பட்ட முறையில் அல்லது கூட்டு முறையில் காய் கறி விவசாயத்தை தொடங்குவதற்கான நடவடிக்கையை சங்கம் ஊக்குவிப்பதாக தாமாசேகரன் தெரிவித்தார்.விவசாயம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம்ல் இட ஒதுக்கீடு மற்றும் அனைத்து உதவிகளையும் செய்யும் என்பதால் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் கால் பதிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தலைவர் எம்.தனபாலன், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்றுமே தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு அரணாக திகழம் என்பதால் ஒவ்வொரு தொழிலாளியும் சங்கத்தில் அங்கத்துவம் பெருவதை உறுதி செய்யும் படி கேட்டுக் கொண்டார். தொழிற்சங்கத்தின் தேசிய தலைமையக அதிகாரி நாராயணசாமி புதிய சம்பள ஒப்பந்தம் மற்றும் காப்புறுதி திட்டம் தொடர்பாக விளக்கம் தந்தார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் சிங்காரம் கலந்து கொண்டதுடன் உறுப்பினர்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.







