Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம்

Share:

கோவிட் 19 புதிய சம்பவங்கள் அதிகரித்துவருவது மற்றும் பள்ளிகளில் முகக்கவசம் அணியும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து, கல்வி அமைச்சு இன்று சிறப்பு கலந்தாலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது.

அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு ஏற்ப மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசத்தை அணிவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான வழிமுறைகளை வகுக்கும் நோக்கில், இந்தச் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அமைச்சர் விளக்கினார்.

Related News