இந்நாட்டில் ஆறாம் படிவத்தை பள்ளி விதிமுறைகளுடன் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்துள்ளார்.
மாறாக, பள்ளி வளாகத்தில் ஆறாம் படிவம், ஒரு பகுதியாக விளங்கிய போதிலும், அப்படிவத்திற்கு சிறிது தளர்வு முறைகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார்.
ஆறாம் படிவத்தின் சூழ்நிலை மாற்றப்பட வேண்டும்.
ஏனெனில், இது உண்மையில் இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவத்தில் முடிவடையும் பள்ளிக் கல்விக்கு பிறகு மெட்ரிகுலோஷன் போன்ற பிந்தைய படிப்பாகும் என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்கிடம் சில பரிந்துரைகளை தாம் முன்வைக்கவிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
பள்ளி மற்றும் அதன் கலாச்சார சூழ்நிலைக்கு ஏற்ப ஆறாம் படிவம் கையாளப்படக்கூடாது.
அந்த படிவத்தில் உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் கையாளுகின்ற முறையை நாமே தீர்மானிக்க வேண்டுமே தவிர அது பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது. குறிப்பாக பள்ளி விதிமுறைகளைப் போல் அல்லாமல் மாணவர்கள் சுதந்திரமாக செயல்படவும், பழகவும் அவர்களின் வளர்ச்சிக்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பு நிகழ்வின் போது பிரதமர் மேற்கண்ட கருத்தை பகிர்ந்துக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


