சிகாமட், ஆகஸ்ட்.30-
ஜோகூர், சிகாமட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்த நில நடுக்க அதிர்வில் அந்த நகரின் சாலைகள் மற்றும் பாலங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று பொதுப்பணி இலாகா அறிவித்துள்ளது.
பிரதான பாலங்களில் சோதனையிட்ட போது, அவற்றின் கட்டமைப்பில் விரிசலோ அல்லது நகர்ச்சியோ எதுவும் இல்லை. அனைத்தும் பயனீட்டுக்குப் பாதுகாப்பானவையே என்று அவ்விலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் நடப்பு நிலையைப் பொதுப்பணி இலாகா அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.








