ஷா ஆலாம், ஜூலை.14-
தனது மனைவி உட்பட பிற பெண்களுடன் தாம் உறவு கொண்ட காட்சிகளை உள்ளடக்கிய ஆபாசப் படங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் சமய சொற்பொழிவாளர் ஒருவருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டு விசாரணை அறிக்கைகளும் மேல் நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தவிர 13,14, 19 வயதுடைய ஆண்களையும், சிறார்களையும் ஓரினப்புணர்ச்சி செய்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கையும் துணை பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறார்களை இலக்காகக் கொண்டு ஷா ஆலாம் வட்டாரத்தில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் ஆடவருக்கு எதிராகச் செய்து கொள்ளப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த பாகிஸ்தான் ஆடவர் தலைமறைவானதையும் ஏசிபி இக்பால் சுட்டிக் காட்டினார்.
எனினும் அந்த நபர் மற்றொரு பாகிஸ்தான் ஆடவருடன் தாய்லாந்துக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில் கடந்த ஜுலை 8 ஆம் தேதி கெடா, கோல நெராங்கில் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார் என்று ஏசிபி இக்பால் குறிப்பிட்டார்.








