கோத்தா கினபாலு,
மாணவி ஸாரா கைரினா மகாதீர் வழக்கு தொடர்பாக, கடந்த சனிக்கிழமை பார்ட்டி வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்டால் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை தலைமை வழக்கறிஞர் மன்ற அலுவலகம் ஆய்வு செய்து வருகின்றது.
இந்த ஆய்வின் முடிவில், நீதிமன்றத்தை அவமதிப்பது போல் அவர் கருத்துக்கள் ஏதேனும் தெரிவித்திருந்தால் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் தலைமை வழக்கறிஞர் மன்றம் அறிக்கை விடுத்துள்ளது.
ஷாஃபி அப்டாலின் கருத்துக்கள், பொதுமக்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு, நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணைகளின் சுமூகமான முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








