Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

Share:

ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி ஈரான் மற்றும் அமெரிக்கா விதித்துள்ள தடைகள், ஆசியாவின் முக்கியமான கடல் போக்குவரத்து வழித்தடங்களின் பாதுகாப்பு குறித்து புதிய அச்சங்களை எழுப்பியுள்ளது.

இச்சூழலில், இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே அமைந்துள்ள மலாக்கா நீரிணை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் இந்த நீரிணையின் மிகச் சுருங்கிய பகுதி வெறும் 2.7 கிலோமீட்டர் அகலமே கொண்டது. இது ஹோர்முஸ் நீரிணையை விட 10 மடங்கு குறுகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக வர்த்தகத்தின் சுமார் 40 விழுக்காடு இந்த வழித்தடம் வழியாக நடைபெறுகிறது.

குறிப்பாக, மத்திய கிழக்கில் இருந்து சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசியாவின் முக்கிய பொருளாதார நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் போக்குவரத்து பெரும்பாலும் இந்த மலாக்கா நீரிணையை சார்ந்தே உள்ளது.

இதனால், இந்த முக்கிய கடல் பாதையின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்